Monday, 25 February 2013

பென்னே பாஸ்தா


பென்னே பாஸ்தா(PENNE PASTA):



தேவையான பொருட்கள்:

பென்னே பாஸ்தா – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 2
தக்காளி சாஸ் (பாஸ்தா சாஸ்)- 1 கப்
சீஸ் துருவியது -விருப்பமான அளவு
உப்பு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – பாஸ்தா வேக வைக்க
வெங்காயத்தாள் – சிறிது (அலங்கரிக்க)


செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைப்பதற்குத் தேவையான அளவு தண்ணீரை நிரப்பவும்.
தண்ணீரைக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்த பிறகு, 2 டீ ஸ்பூன் உப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும்.
பின் இதனுடன் பாஸ்தாவைச் சேர்க்கவும். பாஸ்தா நன்கு வெந்து மிருதுத் தன்மையை அடையும்வரை தண்ணீரில் வேக விடவும். பாஸ்தா வேகும் போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சீராக வேக இடையிடையே கரண்டிவைத்து லேசாகக் கிளறிவிடவும்.
வடிதட்டு கொண்டு பாஸ்தாவை தண்ணீர் இன்றி வடிகட்டவும்.


பாஸ்தாவை குளிர்ச்சியான தண்ணீரில் ஒருமுறை அலசி பின் மீண்டும் வடிகட்டவும்.பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்க இது துணை செய்யும்.
வடிகட்டிய பாஸ்தாவை ஒரு பவுலில் போட்டு, உலராமல் இருக்க மூடி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டைத் தோல் நீக்கி விழுதாக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து ஆலீவ் ஆயில் / வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் இதனுடன் தக்காளி சாஸ் (பாஸ்தா சாஸ்) ,தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
பாஸ்தா சாஸ் நன்கு வதங்கி எண்ணெயாகப் பிரியத் தொடங்கும்.இந்நிலையில் வேக வைத்து வைத்திருக்கும் பாஸ்தாவை இதனுடன் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
மசாலாக் கலவை பாஸ்தாவில் சீராகப் பரவும்படி கரண்டி வைத்து மெதுவாகக் கிளறி விடவும்.
உப்பைச் சரிபார்க்கவும்.பாஸ்தாவின் மீது துருவிய சீஸ்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்


No comments:

Post a Comment