Thursday, 21 February 2013

ஆரஞ்சு மில்க் கிரீம்


ஆரஞ்சு மில்க் கிரீம்




  • ஆரஞ்சுபழம் 2 
  • பால் ஒரு கப் 
  • சர்க்கரை 3 மேசைக்கரண்டி 
  • வெனிலா ஐஸ்கிரீம் 4 கப் 
  • எலுமிச்சம்பழம் 1 


ஆரஞ்சுபழத்தின் தோல் உரித்து, விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தினை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளுடன் எலும்மிச்சை சாற்றினை கலந்து மிக்ஸியில் , நன்கு அடித்துக் கலக்கி கொள்ளவும். இதனுடன் சர்க்கரையையும், பாலையும் கலந்து நன்கு கலக்கி, பிறகு ஐஸ்கிரீமை இதனுடன் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கலக்கிக் கொள்ளவும்.

No comments:

Post a Comment