Tuesday, 19 February 2013

ஓமானி ஹல்வா




இந்த ஓமானி  ஹல்வா ஓமானியர்களின் பாரம்பர இனிப்பு இது, 1920 லிருந்து ஈத் மற்றும் கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பாக  இந்த ஹல்வா இல்லாமல் இருக்காது. 


தேவையான பொருட்கள்

சோளமாவு – 100 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
ரெட் கலர் பொடி – சிறிது

சர்க்கரை  - 150 கிராம்
தேன் – 25 மில்லி
தண்ணீர் – 300 மில்லி
சாப்ரான் – ஒரு மேசை கரண்டி
ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

ரோஸ் வாட்டர் – 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி

நட்ஸ் வகைகள்
முந்திரி – 100 கிராம்
பொடியாக நறுக்கிய பாதம் தேவைக்கு (8 பாதம்)
பிஸ்தா பிளேக்ஸ் – 2 மேசைக்கரண்டி







செய்முறை

ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் முந்திரியை இரண்டாக அரிந்து  நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

அதே பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சோளமாவு (கார்ன் மாவு) கலர் பொடி சேர்த்து கலக்கி வைக்கவும்.



சர்க்கரை பாகு கொதிக்க ஆரம்பிக்கும் போது கரைத்து வைத்த கார்ன் மாவை ஊற்றி தீயின் தனலை குறைத்து  வைத்து கைவிடாமல் கிளறவும்.
இடைஇடையே பட்டர் + நெய் சிறிது விட்டுகிளறவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் சாஃப்ரான் சேர்த்து நன்கு கிளறவும்





கடைசியாக தேன் வறுத்து வைத்துள்ள முந்திரி ,பொடியாக நறுக்கிய பாதம் , பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து மேலும் கிளறி . ஒரு ட்ரேவில் பட்டர் அல்லது நெய் தடவி ஹல்வாவை கொட்டி சமப்படுத்தி ஆறவைக்கவும்.






ஆறியதும் துண்டுகள் போடவும்.,



சாஃப்ரான் மற்றும் ஏலப்பொடி மனத்துடன் நட்ஸுடன் கூடிய ரிச் ஓமானி ஹல்வா ரெடி






 


                                   



No comments:

Post a Comment