பால் கேசரி
பால் கேசரி
தேவையான பொருட்கள்
- பால் : 3/4 லீட்டர்
- பச்சரிசி மாவு : 1 1/2 டம்ளர்
- சர்க்கரை : 1 1/2 டம்ளர்
- நெய் : 1/2 டம்ளர்
- ஏலப்பொடி : 1 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு : 100 கிராம்
- உலர்ந்த திராட்சை : 100 கிராம்
செய்முறை :
- கால் லீட்டர் பாலை காய்ச்சி ஆற வையுங்கள். மீதி அரை லீட்டர் பாலை அடுப்பில் வைத்து பொங்கியதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஆறவைத்த பாலில் பச்சரிசி மாவைச் சேர்த்து நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். அதை கொதிக்கும் பாலில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலப்பொடியைத் தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1lsMoqjoPk1AX8N36OX4nWQ-3Y3xwyIOO8G90qxSCAdx8O7NS255KZjZW-qPeGcF9QHqU2unbqcwr8iZFgMiMGUIcRqoRjTDTSXUcUXKZnbbWXXjiOerj_PHvkBcjNsu_X7xW8K90FWo/s1600/images+(13).jpg)
- இந்தப்பால் கேசரி புது சுவையாக இருக்கும். வீட்டில் சாதாரண நாட்களிலும் செய்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment