Tuesday, 26 February 2013

காய்கறி கட்லெட்

காய்கறி கட்லெட்:


தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு: 1/4 கிலோ
ரஸ்க் - 6
பட்டாணி: 100 கிராம்
பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
காரட்: 150 கிராம்
முருங்கை பீன்ஸ்: 50 கிராம்
பெரிய வெங்காயம்: 2
இஞ்சி:  சிறிய துண்டு
வற்றல் தூள்: 2 தேக்கரண்டி
பூண்டு: 8 பல்
மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது
கொஞ்சம் நெய்
பட்டை: 1
கிராம்பு: 6
உப்பு: தேவைக்கேற்ப
முந்தரி பருப்பு:  10
மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி


செய்முறை:
    உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
   மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும். எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.

No comments:

Post a Comment