Sunday, 24 February 2013

நண்டு கிரேவி


நண்டு கிரேவி:

                 
தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு பல்-6
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
பச்சை மிள்காய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -8
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைடீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ,உப்பு சிறிது,அரைஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.10 நிமிடத்தில் வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.

தேங்காய்,முந்திரி,பச்சை மிளகாய்,மல்லி இலை,சீரகம் ,சோம்பு போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
                   

இஞ்சி பூண்டை நன்கு தட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போடவும்,பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்பு வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா போட்டு வதக்கவும்.

பின்பு நறுக்கிய தக்காளி சேர்க்கவும்,நன்றாக மசிந்ததும்,மிள்காய்த்தூள்,மல்லித்தூள் சேர்க்கவும்,பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.

மசாலா வாடை போனதும் வேகவைத்த நண்டை சேர்க்கவும்.நன்கு மசாலா படும்படி பிரட்டவும்.


அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும்.கெட்டியாக இருந்தால் மீண்டும் பாதி கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி கொதித்து வற்றி வரும்.
தேங்காய் வாடை மடங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சூப்பர் சுவையான நண்டு கிரேவி ரெடி.

குறிப்பு : காரம் வேண்டுமானால் கூட்டி கொள்ளலாம்.

1 comment: