Thursday, 21 February 2013

ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப்


ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப் - sweet corn chicken soup




//ஹோட்டல்களில் சென்றுதான் ஸ்விட் கார்ன் சிக்கன் சூப் குடிக்கனுமா, ஏன் நாமே செய்யலாமே இதை செய்து நீங்கள் பழகிவிட்டால் ஹோட்டலில் குடிக்கும் சூப் உங்களுக்கு பிடிக்காது. வீட்டிலேயே செய்ய‌ க‌த்து கொண்டால் பார்டிக‌ளில் அச‌த்த‌லாம். 
நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.//
 


தேவையான பொருட்கள் 
சிக்கன் = நான்கு பெரிய துண்டு எலும்புடன் 
மேகி சிக்கன் கியுப் ‍= ஒன்றில் பாதி 
கீரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் = ஒரு பாக்கெட் 
கீரீம் ஆஃப் ஸ்வீட் கார்ன் - ஒரு டின் 
பட்டர் ‍ ஒரு = மேசைக்கரண்டி 
கார்ன் பிளார் பவுடர் ‍ ஒரு குழி கரண்டி 
உப்பு - தேவைக்கு 
சோயா சாஸ் ‍= ஒரு தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி 
கருப்பு மிளகு தூள் ‍ = ஒரு தேக்கரண்டி 
வெள்ளை மிளகு தூள் ‍= ஒரு தேக்கரண்டி 
முட்டை = ஒன்று 


                                                                 


செய்முறை 


1. முதலில் சிக்கனில் மேகி கியுப்,உப்பு ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சிறிது, போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
2. வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும். சிக்கன் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்.
3. தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்க்ன் தண்ணீரில் ஊற்றவும்.
4. பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.
5. பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.
6. பிறகு கார்ன் பிளார் மாவை கால் டம்ளர் கரைத்து ஊற்றவும்.
7. கடைசியில் ஒரு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அனைக்கவும்.
8. பிறகு உப்பு , ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள்,ஒரு டிராப் சோயாசாஸ் , ஒரு மேசைகரண்டி பட்டர் ஊற்றி இரக்கவும்


குறிப்பு: 

இதற்கு கட்லட் சூப்பர் காம்பினேஷன். மற்றபடி சிக்கன் பஜ்ஜி, பகோடா,பஜ்ஜி, வடை, சிக்கன் போன்டா வும் செய்யலாம் ரொம்ப கட்டியாகி விட்டால் பார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்டிகளுக்கு செய்யலாம். 

                                                    

No comments:

Post a Comment