நெல்லிக்காய் ஊறுகாய்:
நெல்லிக்காய் எல்லாவிதச் சத்துகளும் நிறைந்தது. ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சையாகவோ, தேனில் ஊறவைத்தோ சாப்பிடுவது அதைவிட நல்லது. இரும்புச் சத்து, எக்கச்சக்கமாக வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. தலைமுடி, நகம் இவற்றுக்கு வலுவூட்டும். உடலுக்கு, முக்கியமாக கண்களுக்குக் குளிர்ச்சி,
மேற்கூறிய காரணங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் புளிப்பாய் ஒரு காய் கையில் கிடைத்தால் தமிழன் அதை ஊறுகாய் போடாமல் விட முடியுமா?
சரி, முக்கியமாய் அவசரமாய் நெல்லிகாயை பற்றி நான் பேசக் காரணம்.
தேவையான பொருள்கள்:
நெல்லிக்காய் – 8 (பெரியது)
ஊறுகாய்ப் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்
செய்முறை:
- நெல்லிக்காய்களை கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும். (ஊறுகாய் சீக்கிரம் ஊற இது உதவும்.)
- நறுக்க நறுக்க, கொட்டையை ஒட்டி வில்லைகளாக, தானே சுலபமாகக் கழண்டு வரும். அப்படியே துண்டுகளாக எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
- உப்பு, மஞ்சள் தூள், ஊறுகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
- நல்லெண்ணையில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.
* மறுநாளிலிருந்தே உபயோகிக்கலாம். ஒரு வாரத்துக்கு மேலும் வைத்திருந்து உபயோகிப்பதாயிருந்தால் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
* நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.
* பொதுவாக அதிக அளவில்(கிலோ கணக்கில்) நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை.
* அருநெல்லிக்காயிலும் இந்த ஊறுகாயைத் தயாரிக்கலாம்.
No comments:
Post a Comment