Thursday, 21 February 2013

முட்டை பிரியாணி


முட்டை பிரியாணி 

எளிய முறையில் முட்டை பிரியாணி செய்வதற்கான குறிப்பு.

தேவையான பொருட்கள்
  • முட்டை வேக வைத்தது  – 4
  • ஆம்லெட்டு செய்வதற்கு  முட்டை  – 2
  • பிரியாணி அரிசி  – 2  1 /2 கப்
  • வெங்காயம்  – 6
  • தக்காளி  -  3
  • பச்சை மிளகாய்  -  5
  • இஞ்சி  – ஒரு துண்டு
  • பூண்டு  – 6  பல்
  • தேங்காய் துருவியது  – 1 /2 கப்
  • கரம் மசாலா தூள்  – 1  தேக்கரண்டி
  • மிளகுத்தூள்  – 2  தேக்கரண்டி
  • பட்டை  – ஒரு துண்டு
  • ஏலக்காய்  – 2
  • கிராம்பு  – 2
  • நெய்  – 1 /4 கப்
  • தண்ணீர்  – 4 1 /2 கப்
  • தயிர்  – 2  மேசைக்கரண்டி
  • புதினா இலை  – 2  மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - 1 /2 கப்
  •                                                 
செய்முறை

  • அரிசியை 1 /2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வேக வைத்துள்ள முட்டையின் தோலுரித்து வைக்கவும்.
  • ஒரு வெங்காயம், 2  பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2  முட்டை, நறுக்கிய வெங்காயம், வைத்து வைத்து ஆம்லெட் தயாரிக்கவும்.
  • ஆம்லெட்டை  4  அல்லது 6  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 4 1 /2 கப் தண்ணீரை சூடு செய்யவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து அப்படியே வைக்கவும்.
  • தேங்காயை, தயிருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  •                                      
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், 1 /4 கப் மல்லி இலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பெரிய கடாயில் நெய் ஊற்றி சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  தக்காளி, மீதமுள்ள மல்லி இலை, புதினா இலை, மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
  • அடித்து வைத்துள்ள தேங்காய் – தயிர் விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • வேக வைத்துள்ள முட்டையை 3  இடங்களில் லேசாகக் கீறி விடவும். முட்டையை மசாலாவில் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • பின் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.
  • கொதிக்க வைத்திருந்த தண்ணீர், அரிசி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு மிதமான சூட்டில் வேக விடவும்.
  • சிறு சிறு துளைகள் மேலே வரும்போது , 1  தேக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  • சாதம் நன்றாக வேகும் வரை மூடி போட்டு வைக்கவும். 1 /2 மணி நேரம் கழித்து  திறந்து நன்றாக கலந்து விடவும்.

                                                              

No comments:

Post a Comment