Sunday, 24 February 2013

மட்டன் கப்ஸா


மட்டன் கப்ஸா - அரபு ஸ்டைல் பிரியாணி / Mutton Kapsa






 தேவையான பொருட்கள்;
மட்டன் - கால்கிலோ
பாசுமதி அரிசி - கால்கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
முழுமிளகு - கால் டீஸ்பூன்
காய்ந்த எலுமிச்சை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறிய துண்டு
பிரியாணி இலை-1
சாஃப்ரான் - 1 பின்ச்
நெய் - அல்லது பட்டர் - 50 கிராம்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
                                    
2 நபர்களுக்கு
மட்டனை முதலில் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டி,  மட்டன் துண்டுகளுடன் சில்லி பவுடர்,தயிர்,உப்பு ஊற வைக்கவும்.அரிசியையும் 10 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம் நறுக்கியும்,தக்காளியை பேஸ்ட் செய்தும் வைக்கவும்.
குக்கரில் ஊறவைத்த மட்டன், இரண்டரை கப் தண்ணீர்,காய்ந்த லெமன்,மிளகு,ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை, தேவைக்கு உப்பு சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.
 
                               
                           
கப்ஸா செய்யும் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
 நறுக்கிய வெங்காய்ம் வதக்கவும்,இஞ்சி பூண்டு பேஸ்ட், விரும்பினால் கால்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.ஏற்கனவே ஏல்ம்,பட்டை,கிராம்பு சேத்து கறியை வேகவைத்து இருக்கிறோம்.


அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும். பிரட்டிவிட்டு நன்கு வதக்கவும்.


ஊறிய அரிசி சேர்க்கவும்.பக்குவமாக  மசாலா அரிசியில் சேரும் படி பிரட்டி விடவும்.
 வேக வைத்த மட்டனை சூட்டுடனே மட்டனில் இருக்கும் தண்ணீருடன் ஊற்றவும்.வேகவைக்கவும்.அரிசி வெந்து மேல் வரும் பொழுது அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.பின்ச் சாஃப்ரான் சேர்க்கவும்.
மூடி  போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும். மீண்டும் பத்து நிமிடம் கழித்து திறக்கவும் ,சோறு உடையாதவாறு பிரட்டி பரிமாறவும்.பரிமாறும் முன்பு காய்ந்த  எலுமிச்சையை எடுத்து விடவும்.
வறுத்த முந்திரி,திராட்சை தூவி அலங்கரித்து  பரிமாறவும்.



.
குறிப்பு:
மிளகாய்த்தூள் விரும்பினால் சேர்க்கலாம், கப்ஸா காரம் இல்லாமல் இருக்கும்.இது அரபு ஸ்டைல் பிரியாணி.

No comments:

Post a Comment