Monday, 29 July 2013

சில்லி சிக்கன் பிரை

சில்லி சிக்கன் பிரை:




தேவையான பொருட்கள்: 



  • கோழி 1 கி
  • பெரிய வெங்காயம் 6
  • மிளகாய் வற்றல் 7
  • தக்காளி 5
  • இஞ்சி, பூண்டு சிறிதளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • கரம் மசாலா
  • டால்டா அல்லது நெய்
  • வினிகர்
  • எலுமிச்சை சாறு
  • வெள்ளரிக்காய்



செய்முறை: 


முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Monday, 11 March 2013

கோதுமை பிரதமன்.

கோதுமை பிரதமன்.


இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.




தேவையானப் பொருட்கள்:-


  •  கோதுமை ரவை - கால் கப்
  •   பொடித்த வெல்லம் - முக்கால் கப்

  •  கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப்
  •        ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

  •        நெய் - 2 டீஸ்பூன்

  •        முந்திரி - 10.

செய்முறை:-

    கோதுமை ரவையுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.
    ரவை வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கொதிக்கும் போது, தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைக்கவும்.
    முந்திரிப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, மேலாகத் தூவவும்.
    இறக்கும் போது தளர இருந்தாலும், ஆறியதும் கெட்டியாகி விடும்.


Tuesday, 5 March 2013

தவா சிக்கன்

 தவா சிக்கன்

அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப் போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வர மிளகாய் – 2
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ரஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் – 1 (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய் ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிள காய் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத் தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிக்கன் துண்டுக ளை போட்டு மஞ்சள் தூள், மிளகா ய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும். பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர் த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை சுமார் 3-4 நிமிடம் கிளற வேண் டும். இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும். இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும். இதோ தவா சிக்கன் தயாராகிவிட்டது. இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Thursday, 28 February 2013

பிரட் பிஸ்ஸா

பிரட் பிஸ்ஸா:


தேவையான பொருட்கள்:


  •     பிரட் – 6 ஸ்லைஸ்
  •     தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ் / கெட்ச் அப் – 1/2 கப்     (tomato sauce/ pasta sauce/ ketchup)

  •     ஆலப்பேன்யோ துண்டுகள் - காரம் தேவைக்கேற்ப(pickled jalapeno pepper slices)

  •     உப்பு – தேவையான அளவு
  •     துருவிய மொஸரெல்லா சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:


        பிரட்டில் லேசாக வெண்ணெய் தடவி, தோசைக் கல்லில் அல்லது ஓவனில் வைத்து டோஸ்ட் செய்யவும். பிரட்டின் இருபுறமும் திருப்பிவிட்டு, லேசான பொன்னிறமாக டோஸ்ட் செய்து, பிரட் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.
        பிரட்டின் மீது சிறிது தக்காளி சாஸ்/ பாஸ்தா சாஸ்/ கெட்ச்அப் வைத்து, தட்டையான கரண்டியால் சாஸ் பிரட் முழுவதும் பரவும்படி தேய்த்து விடவும். (நான் பாஸ்தா சாஸ் பயன்படுத்தி செய்தேன்.)
        இதன் மீது தேவையான அளவு ஆலப்பேன்யோவை துண்டுகளாக நறுக்கி மேலே தூவி நிரப்பவும்.
        தேவையான அளவு உப்பை மேலே தூவிக் கொள்ளவும்.
        கடைசியாகத் துருவிய சீஸை மேலே பரவலாகத் தூவி விடவும்.
        இதே போல் எல்லா பிரட் துண்டுகளுக்கும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
        ஓவனை 250 ° – ல் வைத்து ப்ரீ-ஹீட் செய்யவும். (5 நிமிடங்கள்)
        ஓவனில் கவனமாக பிரட் துண்டுகளை வரிசையாகப் பரப்பி வைக்கவும். 5 நிமிடங்கள் வரை பேக் செய்து பின் வெளியே எடுக்கவும்.

(சீஸ் நன்றாக உருகிய பின் வெளியே எடுக்கவும்.)

    சூடாகப் பரிமாறவும்.


    பருப்பு புளி மசியல்



    பருப்பு புளி மசியல்:

                                    


    தேவையானப்பொருட்கள்:

    துவரம் பருப்பு - 1/4 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
    உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

    தாளிக்க:

    எண்ணை - 1 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
    பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது

                                                                   
    செய்முறை:

    புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

    சூடான சாதத்துடன் பரிமாறவும்.

                                                 

    அவல் சப்பாத்தி


    அவல் சப்பாத்தி:

    தேவையானவை:

    சுத்தம் செய்யப்பட்ட அவல் = அரை கப்
    புளித்த தயிர் = ஒரு கப்
    கோதுமைமாவு = ஒரு கப்
    மிளகுத்தூள் = ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் = அரை டீஸ்பூன்
    உப்பு = தேவைக் கேற்ப
    எண்ணெய் அல்லது நெய் = தேவைக்கேற்ப.

    செய்முறை:
     அவலுடன் ஒரு கப் தயிர், உப்பு சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு அக் கலவையுடன் உப்பு, கோதுமைமாவு, மிளகாய்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

    அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய்விட்டு சுட்டு எடுக்கவும். சைட்&டிஷ் ஆக ‘தால்’ ஏற்றது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

    அவல் சப்பாத்தி: கோதுமை மாவுக்கு பதிலாக கேழ்வரகுமாவை சேர்த்து சப்பாத்தி செய்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இன்னும் மிருதுவாகவும் இருக்கும்.

    நெத்திலி மீன் குழம்பு :


     நெத்திலி மீன் குழம்பு :




    தேவையான பொருட்கள்:












    நெத்திலி மீன் – 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
    தக்காளி – 3
    மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
    மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
    தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
    புளி – ஒரு எலுமிச்சை அளவு
    எண்ணை – ஒரு குழிக்கரண்டி
    கடுகு – ஒரு டீ ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் – 2
    கறிவேப்பிலை – ஒரு கொத்து
    வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
    உப்பு – தேவைக்கேற்ப

    செய்முறை:
    * நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணை ய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகிய வற்றை தாளிக்கவும்.
    * வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போ ட்டு வதக்கணும்.
    * பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
    * குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்க ளைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.
    * காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாரு ங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.


    கோதுமை ரவா அல்வா


    கோதுமை ரவா அல்வா







    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவா -1 கப்
    சர்க்கரை - 2 கப்
    சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 1 கப்
    நெய் - அரை கப்
    ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு

    செய்முறை:

    குக்கரில் நெய்யை ஊற்றி, அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும்.

    சிறிது தண்ணீரை தனி பாத்திரத்தில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும், தீயின் அளவை குறைத்து, சூடான நீரை எடுத்து மாவில் ஊற்றவும். தண்ணீர் தெறிக்கும் அதனால் மெதுவாக ஊற்றவும்.

    பிறகு மூடி வைத்து, தீயின் அளவைக் குறைத்து வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி, அதில் சர்க்கரை, துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். ஆவி வந்ததும், அதில் கலவையைக் கொட்டி, குறைந்த அளவு வெப்பத்தில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.

    எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும். இறக்கிய பின் அத்துடன் நறுக்கின முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

    Tuesday, 26 February 2013

    காய்கறி கட்லெட்

    காய்கறி கட்லெட்:


    தேவையான பொருட்கள்:
    உருளை கிழங்கு: 1/4 கிலோ
    ரஸ்க் - 6
    பட்டாணி: 100 கிராம்
    பெருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
    காரட்: 150 கிராம்
    முருங்கை பீன்ஸ்: 50 கிராம்
    பெரிய வெங்காயம்: 2
    இஞ்சி:  சிறிய துண்டு
    வற்றல் தூள்: 2 தேக்கரண்டி
    பூண்டு: 8 பல்
    மல்லி தழை, கருவேப்பில்லை சிறிது
    கொஞ்சம் நெய்
    பட்டை: 1
    கிராம்பு: 6
    உப்பு: தேவைக்கேற்ப
    முந்தரி பருப்பு:  10
    மைதா அல்லது கடலை மாவு: 2 மேசை கரண்டி


    செய்முறை:
        உருளை கிழங்கை வேக வைத்து உரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கு ஆவியில் வேக வைத்து இறக்கி அகன்ற பாத்திரத்தில் உதிர்த்த உருளைக் கிழங்கு, வற்றல தூள், மசாலா போடி, தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்தரி பருப்பு, மல்லி தழை, கருவேப்பில்லை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும் காய்கறி கலவையை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
       மைதாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து காய்கறி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவு எடுத்து வட்டமாக அழுத்தி சீராக கையால் உருட்டி மைதா மாவில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாக புரட்டி (காய்கறி தெரியாமல் புரட்ட வேண்டும்) தாம்பாளத்தில் வைக்கவும். எல்லா காய்கறிகளையும் இவ்வாறு புரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய்யை காய வைத்து கட்லேட்டுகளை போட்டு பொன்னிறமாக எடுக்கவும். தோசைக் கல்லிலும் நெய்யை ஊற்றி, கட்லேட்டுகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கலாம். சுவையான காய்கறி கட்லெட் பரிமாற, ருசி பார்க்க ரெடி.

    கதம்ப சாதம்

    கதம்ப சாதம்:



    தேவையான பொருட்கள்:
    அரிசி: 1 கிலோ
    துவரம் பருப்பு: 250 கிராம்
    உளுந்தம்பருப்பு: 50 கிராம்
    கடலைபருப்பு: 50 கிராம்
    தக்காளி: 250 கிராம்
    வெங்காயம்: 250 கிராம்
    புளி: 50 கிராம்
    காய்ந்த மிளகாய்: 10 கிராம்
    முழு மல்லி: கிராம்
    மிளகு, சீரகம்: 25 கிராம்
    பெருங்காயம்: 5 கிராம்
    துருவிய தேங்காய்: 150 கிராம்
    காராமணி: 250 கிராம்
    கேரட், பீன்ஸ்: 200 கிராம்
    சேனை கிழங்கு: 250 கிராம்
    கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை கொஞ்சமாக...


    செய்முறை:
       அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து கொள்ளவும், எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும். மிச்சமுள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேங்காய் துருவல் போட்டு வேக விடவும்.
       வெந்ததும் ஏற்கனவே வெந்து எடுத்து வைத்திருக்கும் அரிசி, பருப்பு, கலவையில் போடவும். அதன் மீது தேவையான மசாலா தூள் மற்றும் புளிக்கரைசலை ஊற்றி, கடைசியாக நெய் கரைத்து விடவும். இப்போது சுவையான கதம்ப சாதத்தை வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு  பரிமாறவும்.

    பகோடா


    பகோடா:

    சுவையான பகோடா!

    தேவையான பொருள்கள்
    கோஸ் (அரிந்தது)-1கப்
    பெரிய வெங்காயம் (அரிந்தது)-1கப்
    பச்சை மிளகாய்-3
    இஞ்சி பூண்டு விழுது-1 மேசைக் கரண்டி
    சோயா சாஸ்-1 மேசைக் கரண்டி
    மைதா மாவு-4 மேசைக் கரண்டி
    அரிசி  மாவு-2 மேசைக் கரண்டி
    சோளமாவு-2 மேசைக் கரண்டி
    கருவேப்பிலை-தேவையான அளவு
    கொத்தமல்லி தழை-தேவையான அளவு
    உப்பு-தேவையான அளவு
    எண்ணெய்-தேவையான அளவு

    முன்னேற்பாடுகள்:

    1. முட்டை கோஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் அளவாக அரிந்துக்கொள்ளவும்.
    2. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
    3 கருவேப்பிலை, கொத்த மல்லி இலை இரண்டையும் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

    செய்முறை:

    கோஸ், வெங்காயம், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு அனைத்தையும் நீர் விடாமல் பிசைந்து கலவையை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கலவையை கிள்ளி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான மொறு மொறு பகோடா ரெடி.


    சுவையான மாங்காய் மீன் குழம்பு



    சுவையான மாங்காய் மீன் குழம்பு:


    மீன் குழம்பில் புளி சேர்த்து செய்வது ஒரு சுவை. அதே குழம்பில் மாங்காய் சேர்த்தால் அந்த மீனின் சுவை மாங்காய்க்கு வந்து விடும். குழம்பின் சுவையும் கூடுதல் சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்
    மீன் – அரை கிலோ
    மாங்காய் – 1
    சின்ன வெங்காயம் – 100 கிராம்
    தக்காளி – 3
    பச்சை மிளகாய் -2
    இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
    மிளகாய்த்தூள் – 1- ஒன்னரை டீஸ்பூன்
    மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
    சீரகத்தூள் – கால்ஸ்பூன்
    மிளகுத்தூள் – கால்ஸ்பூன்
    மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன்
    தேங்காய்ப் பால் – 1 சிறிய கப்
    மல்லி கருவேப்பிலை – சிறிது
    புளி – சிறிய எலுமிச்சை அளவு
    எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
    கடுகு – அரை டீஸ்பூன்
    வெந்தயம் – அரை டீ ஸ்பூன்
    உப்பு – தேவைக்கு

    குழம்பு செய்முறை:-

    மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி மஞ்சள் உப்பு போட்டு அலசி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.சதை பற்றான கொட்டையில்லாத சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளி ஊறவைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடவும்,நன்கு மசிந்து விடும்,அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கி மணம் வரவேண்டும்.
    நன்கு கொதி வந்த உடன் ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும் அப்போது நறுக்கிய மாங்காய் சேர்க்கவும். சிறிது கொதி வரவும் மீனை போடவும். மாங்காயும் மீனும் வெந்து வரும். அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். நன்கு கொதிவரவும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரவும் குழம்பு ரெடி. விரும்பினால் மல்லி இலை தூவி இறக்கவும். நறுக்கிய மாங்காய்,சிறிது நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்வதால் குழம்பு சூப்பராக இருக்கும்.



    Monday, 25 February 2013

    பென்னே பாஸ்தா


    பென்னே பாஸ்தா(PENNE PASTA):



    தேவையான பொருட்கள்:

    பென்னே பாஸ்தா – 2 கப்
    பெரிய வெங்காயம் – 1
    பூண்டு – 6 பல்
    பச்சை மிளகாய் – 4
    தக்காளி – 2
    தக்காளி சாஸ் (பாஸ்தா சாஸ்)- 1 கப்
    சீஸ் துருவியது -விருப்பமான அளவு
    உப்பு – 2 டீ ஸ்பூன்
    வெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் – பாஸ்தா வேக வைக்க
    வெங்காயத்தாள் – சிறிது (அலங்கரிக்க)


    செய்முறை:

    ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைப்பதற்குத் தேவையான அளவு தண்ணீரை நிரப்பவும்.
    தண்ணீரைக் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்த பிறகு, 2 டீ ஸ்பூன் உப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும்.
    பின் இதனுடன் பாஸ்தாவைச் சேர்க்கவும். பாஸ்தா நன்கு வெந்து மிருதுத் தன்மையை அடையும்வரை தண்ணீரில் வேக விடவும். பாஸ்தா வேகும் போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சீராக வேக இடையிடையே கரண்டிவைத்து லேசாகக் கிளறிவிடவும்.
    வடிதட்டு கொண்டு பாஸ்தாவை தண்ணீர் இன்றி வடிகட்டவும்.


    பாஸ்தாவை குளிர்ச்சியான தண்ணீரில் ஒருமுறை அலசி பின் மீண்டும் வடிகட்டவும்.பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்க இது துணை செய்யும்.
    வடிகட்டிய பாஸ்தாவை ஒரு பவுலில் போட்டு, உலராமல் இருக்க மூடி வைக்கவும்.
    வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    பூண்டைத் தோல் நீக்கி விழுதாக்கவும்.
    ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து ஆலீவ் ஆயில் / வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும்.

    சூடான எண்ணெயில் வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
    பின் இதனுடன் தக்காளி சாஸ் (பாஸ்தா சாஸ்) ,தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
    பாஸ்தா சாஸ் நன்கு வதங்கி எண்ணெயாகப் பிரியத் தொடங்கும்.இந்நிலையில் வேக வைத்து வைத்திருக்கும் பாஸ்தாவை இதனுடன் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
    மசாலாக் கலவை பாஸ்தாவில் சீராகப் பரவும்படி கரண்டி வைத்து மெதுவாகக் கிளறி விடவும்.
    உப்பைச் சரிபார்க்கவும்.பாஸ்தாவின் மீது துருவிய சீஸ்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்


    தேங்காய் பூரண பூரி


    தேங்காய் பூரண பூரி:


    தேவையானவை:
     கோதுமை மாவு (அ) மைதா மாவு - ஒரு கப், 
    சர்க்கரை - அரை கப்,
     ரவை - கால் கப், 
    தேங்காய் துருவல் - அரை கப், 
    எண்ணெய் - பொரிப்பதற்கு.

    செய்முறை:
     தேங்காய், ரவை, சர்க்கரை மூன்றையும் பிசறி 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவை நீர் சேர்த்து நன்றாக பிசையவும். (ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்). சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு சிறிய உருண்டையை எடுத்து, குழி போல செய்து அதில் தேங்காய், ரவை, சர்க்கரை கலவையை வைத்து மூடி விடவும். இதை சிறிய மெல்லிய பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.


    குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம் அல்லது தேங்காய் கொப்பரை துருவலில் கலர் சேர்த்து பூரி மேல் தூவி பரிமாறலாம்.

    போ பிஸ்கேட் (ப்ளவர் பிஸ்கேட்)


    போ பிஸ்கேட் (ப்ளவர் பிஸ்கேட்) - Bow Biscuit:



    போ பிஸ்கேட் (ப்ளவர் பிஸ்கேட்)
    தேவையானவை
    மைதா மாவு – அரை டம்ளர்
    சர்க்கரை – 2 மேசை கரண்டி
    பட்டர் – ஒரு மேசை கரண்டி
    உப்பு – அரை சிட்டிக்கை
    ஏலப்பொடி – அரை தேக்கரண்டி





    செய்முறை
    பட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
    மைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து குறுக்கும் நெடுக்குமாக ஒரு இன்ச் அள்வுக்கு கட்செய்து போ ஷேப்பில் பிடித்து வைக்கவும்.


    எண்ணையை காயவைத்து எல்லா போ க்களையும் பொரித்து எடுக்கவும்.



    சுவையான போ பிஸ்கேட் ரெடி, ஒரு மாதம் ஆனாலும் கெடாது மொறு மொறுன்னு இருக்கும்.

    முட்டை கட்லெட் குழம்பு


    முட்டை கட்லெட் குழம்பு

                      

                                            

    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    பெரிய கேரட் - 1
    பொட்டுகடலைமாவு - அரை கப்
    தேங்காய் - 1 முடி
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    மிளகாய் - 6
    இஞ்சி - சிறிதளவு
    சோம்பு - 1 ஸ்பூன்
    தனியா - 2 ஸ்பூன்
    கசகசா - 2 ஸ்பூன்
    பூண்டு - 8
    சீரகம் - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி, கருவேப்பிலை.

                                                     

    செய்முறை:

    முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

    பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய் விழுது இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் நெய் தடவி அதில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.

    ஆறிய பின் தனியாக கிண்ணத்திலிருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.

    இதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் இந்த கலவையை ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி இதனுடன் கட்லட்களை போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.

    ஆறிய பின் கட்லெட் எடுத்து தனியாக தட்டில் வைத்து அதன் மீது கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும். இதை பரோட்டா, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறலாம்.

                                            

    கோழி மிளகு மசாலாக்குழம்பு



    கோழி மிளகு மசாலாக்குழம்பு




    சிக்கின் கறி...சிக்கின் கறி...
    தேவையான பொருட்கள்
    கோழி; –1/2கிலோ
    சிறிய வெங்காயம் –100கிறாம்
    தக்காளி –100கிறாம்
    இஞ்சி –1துண்டு
    உள்ளி –8பற்கள்
    கொத்தமல்லித் தழை –தேவையான அளவு
    எலுமிச்சம் பழம் –அரைமூடி
    மிளகு –1/ 1 தேக்கரண்டி
    மல்லி; –2 தேக்கரண்டி;
    சீரகம் –1/2 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் –1/2 தேக்கரண்டி
    ஏலக்காய் –2
    கராம்பு –2
    தேங்காய் –பாதி
    கசகசா –12 /தேக்கரண்டி
    செய்முறை
    கோழி நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, உப்புத்தூள், எலுமிச்சம்பழச்சாறு, மஞ்சள்தூள் தடவி ஊறவைக்கவும்.
    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். தேங்காயைத் துருவி கசகசாவுடன் அரைத்துக் கொள்ளவும்.
    தாச்சியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், மல்லி;, மிளகு,  பெருஞ்சீரகம், ஏலக்காய், கராம்பு இவைகளை வறுத்து, கடைசியில் சீரகம் சேர்த்து லேசாக வறுத்து நன்கு விழுதாக அரைக்கவும்.
    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.
    ஊறவைத்திருக்கும் கோழித் துண்டுகளைச் சேர்த்து சிறு தீயில் (low Flame)வேகவைக்கவும். கோழித் துண்டுகள் எண்ணெயிலேயே வதங்கியதும் அரைத்த மசாலா,, நீர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
    குழம்பு நன்கு கொதிக்கையில் அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
    கோழி நன்கு வெந்து குழம்பு இறுகிவரும்போது கொத்தழை  மல்லித் தழை தூவி இறக்கி விடவும்
                         

    பால் கோவா


    பால் கோவா:

                                                             
    பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!




    பாலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதில் புரோட்டீன், கால்சியம் அதிகமாக இருக்கிறது. அதில் தினமும் காபி, டீ என்று தான் சாப்பிடுவோம். இப்போது அந்த பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக பால் கோவா செய்து வீட்டில் இருப்பவர்களை அசத்துவோமா!!!

    தேவையான பொருட்கள்:

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி
                                           

    செய்முறை:

    முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

    அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும்.

    அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும்.

    இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.
                                         
                                                           

    இப்போது சுவையான, ஈஸியான பால் கோவா ரெடி!!!பால் கோவா செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி!